இன்னும் எத்தனை தடை விதித்தாலும் சமாளிப்போம்: டிரம்ப் மிரட்டலுக்கு ரஷ்யா பதில்

1

மாஸ்கோ: '' அமெரிக்க விதிக்கும் புதிய தடைகளை சமாளிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ' அமைதி குறித்து புடின் பேசுகிறார். ஆனால், உக்ரைன் மீது தொடர்ந்து குண்டு வீசுகிறார். குறிப்பிட்ட நாட்களுக்குள் உக்ரைன் மீது போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும்' என எச்சரித்து இருந்தார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: அமெரிக்க அதிபர் எதை நோக்கி நகர்கிறார் என்பது என்பது எங்களுக்கு புரிகிறது. புதிய தடைகளை சமாளிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இது போன்ற மிரட்டல்களை விட டிரம்ப்பை எது தூண்டுகிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரியாப்கோவ் கூறுகையில், '' முதலில், எச்சரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் வைப்பது என்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,'' எனக்கூறினார்.

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், 'அமெரிக்க அதிபரின் சமீபத்திய அறிக்கை மிகவும் தீவிரமானது. அதிபர் புடினை தனிப்பட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அத்துமீறல் குறித்து ஆராய சற்று காலஅவகாசம் தேவைப்படுகிறது' என்றார்.

Advertisement