போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

மும்பை: மும்பையில் முதல் ஷோரூமை திறந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு, போட்டி நிறுவனமான மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாககொண்ட டெஸ்லா நிறுவனம் விற்பனையை துவக்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் முதல் ஷோரூமை மும்பையில், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் திறந்து வைத்தார்.
இதனை வரவேற்று, மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எலான் மஸ்க்கையும், டெஸ்லாவையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய மின் வாகன சந்தையில் உற்சாகம் கூடியிருக்கிறது. போட்டியே புதுமை படைப்பதை ஊக்குவிக்கும். சார்ஜிங் மையத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனத்தை சந்தைப்படுத்த துவங்கி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கிளை திறந்துள்ள நிலையில் போட்டி நிறுவனத்துக்கு ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






மேலும்
-
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: 7 பேர் சஸ்பெண்ட்
-
கல்வி உதவித்தொகை குறித்த மோசடி அழைப்பை நம்ப வேண்டாம்: சி.இ.ஓ.,
-
இலவச வேட்டி தயாரிப்பு துவங்கி 3 வாரமாகியும் கூலி வரவில்லை'
-
அஜித்குமார் கொலை: சி.பி.ஐ., 2 வது நாளாக விசாரணை
-
ஒகேனக்கல்லில் 20 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
-
கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது யார்: போலீசார் விசாரணை