மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: 7 பேர் சஸ்பெண்ட்
மதுரை:மதுரை மாநகராட்சியில், பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு புகார் தொடர்பாக, 6 பில் கலெக்டர்கள், ஒரு புள்ளிவிபர குறிப்பாளரை, 'சஸ்பெண்ட்' செய்து கமிஷனர் சித்ரா நேற்று உத்தரவிட்டார்.
இம்மாநகராட்சியில், 2023, 2024ல் ஏராளமான தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்து வரி நிர்ணயித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. சைபர் கிரைம் போலீசார் அறிக்கை அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்; 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, ஐந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மாநகராட்சி அலுவலர், கவுன்சிலர்கள், ஆளுங்கட்சியினர் என 55 பேர் பட்டியலை, போலீசார் தயாரித்து, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறைகேட்டில் தொடர்புடையதாக கருதி, மண்டலம் - 3 அலுவலகத்தில், புள்ளிவிபர குறிப்பாளர் கருணாகரன், பொறுப்பு பில் கலெக்டர்கள் கண்ணன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஆதிமூலம், ரஞ்சித் செல்வகுமார், பெலிக்ஸ் ராஜமாணிக்கத்தை கமிஷனர் சித்ரா சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மேலும்
-
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட துவங்கிய பட்டதாரி கைது
-
கடலில் மூழ்கி 3 மீனவர்கள் பலி?
-
பெங்களூரு சி.சி.பி., போக்குவரத்துக்கு புதிய அதிகாரிகள்... நியமனம்! கர்நாடகாவில் ஒரே நாளில் 35 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
-
பயங்கரவாதி நசீரை போலீஸ் சீருடையில் வங்கதேசம் அனுப்ப சதி தீட்டியது அம்பலம்
-
புதிதாக ஐந்து மாநகராட்சிகள்: துணை முதல்வர் சிவகுமார் திட்டம்
-
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தம்