கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது யார்: போலீசார் விசாரணை
சேலம், சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், அண்ணா பூங்கா அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை உள்ளது. அச்சிலையை வலது புறம் முழுதும் கருப்பு பெயின்ட் படிந்திருந்தது. கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட பீடம் முழுதும், பெயின்ட் நிரம்பி வடிந்திருந்தது. நேற்று காலை அந்த வழியே சென்ற, தி.மு.க.,வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் திரண்டனர். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர்
அஸ்வினி பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மர்ம நபர்கள், கருப்பு பெயின்ட் ஊற்றி, குச்சி மூலம் பெயின்டை சிலை மீது தடவியது தெரியவந்துள்ளது. சிலை அருகே, 2 லிட்டர் தகர பெயின்ட் டப்பாவை கைப்பற்றியுள்ளோம். அங்கு கேமரா இல்லாததால், பிரதான சாலையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்கிறோம்' என்றனர்.
இதனிடையே மாநகராட்சி ஊழியர்கள், சிலை மீது
ஊற்றப்பட்ட கருப்பு பெயின்ட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தம்
-
அடுத்த முதல்வர் குமாரசாமி நிகில் கருத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு
-
குன்ஹா அறிக்கையில் என்ன உள்ளது? தெரியாது என்கிறார் பரமேஸ்வர்
-
இன்று இனிதாக பெங்களூரு
-
தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை துவக்கம்
-
அடுத்த முதல்வர் குமாரசாமி நிகில் கருத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு