ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தம்
பெங்களூரு : 'ஹூப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை, ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரயில் எண் 07355: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வரை சனிக்கிழமை தோறும் இயங்கும் வாராந்திர விரைவு ரயில், ஜூலை 26 வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக. 9 முதல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், ராமேஸ்வரம் செல்வதற்கு பதிலாக, ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும்.
எண் 07356: ராமேஸ்வரம் - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி வரை ஞாயிறு தோறும் வாராந்திர சிறப்பு ரயில், ஜூலை 27 வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆக., 10 முதல் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
நேரம் மாற்றம்
எண் 11006 புதுச்சேரி - தாதர் சாளுக்கியா வாரத்தில் மூன்று நாள் இயங்கும் விரைவு ரயில், செப்டம்பர் 9ம் தேதி முதல் காட்பாடியில் அதிகாலை 1:05 மணிக்கு நின்று, 1:25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதுபோன்று, எண் 17209: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - காகிநாடா டவுன் சேஷாத்திரி தினசரி விரைவு ரயில், செப்டம்பர் 10 முதல் ஜோலார்பேட்டையில் மதியம் 2:00 மணிக்கு நின்று, 2:05 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும்
-
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்
-
பஸ் பயணத்தில் பிரசவம்: குழந்தையை வெளியே வீசி கொன்ற தம்பதி கைது
-
காசாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் இடத்தில் வன்முறை: 20 பேர் உயிரிழப்பு
-
அரசு மகப்பேறு மருத்துவமனையின் அவலம்; இதுதான் சிறந்த கட்டமைப்பா: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும்; சொல்கிறார் சீமான்
-
கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!