காந்தி ஓவியம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை!

12


லண்டன்: போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில், காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது.


பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம், நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. ஓவியம் ஆன்லைனில் விற்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1931ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி லண்டனுக்குச் சென்ற போது அவரை கிளேர் லெய்டன் சந்தித்துள்ளார். அப்போது ஓவியம் வரைவதற்கு வசதியாக காந்தி போஸ் கொடுத்தார். தன் வாழ்நாளில் ஓவியருக்கு காந்தி போஸ் கொடுத்தது அந்த ஒரு நிகழ்வு மட்டுமே.



அப்போது, லெய்டன் இந்திய சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளரான அரசியல் பத்திரிகையாளர் ஹென்றி நோயல் உடன் நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கிளேர் லெய்டன்?



* கிளேர் லெய்டன், ஏப்ரல் 12ம் தேதி, 1898ம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவர், 1915ம் ஆண்டில், லைட்டன் பிரைட்டன் கலைக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கினார்.



* இவர் 1921ம் ஆண்டு முதல் 1923ம் ஆண்டு வரை ஸ்லேட் நுண்கலை பள்ளி மற்றும் மத்திய கலை மற்றும் கைவினைப் பள்ளி ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.


* படிப்பை முடித்த பிறகு, லீடன் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய நேரம் ஒதுக்கி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பால்கன் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.


* அவர் நிலப்பரப்புகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் வரைந்து, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிப்பதில் ஒரு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.


பிரபலமான பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம் தான், ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Advertisement