பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு

சென்னை : 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, தி.மு.க., அரசு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா?' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தொடர்ந்து, எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தம் கோரி போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தி.மு.க., அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதுடன், கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோருவது தவறா?
தேர்தல் நேரத்தில் மட்டும், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும், ஆசிரியர்கள் போராடட்டும் என, அலைக்கழிப்பதால், அரசு பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையை கூட உணர இயலாதா?
ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசு. 'நாடு போற்றும் நல்லாட்சி' என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு, உடனே பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை காக்கும் பொருட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று, போராட்ட களத்தில் இருப்போருக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும்; சொல்கிறார் சீமான்
-
கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!
-
ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன்
-
கீழடி அகழாய்வு: சர்ச்சைகளின் உண்மை நிலையும் மத்திய அரசின் பங்கும்
-
நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!
-
'பத்து தோல்வி பழனிசாமி; மக்கள் உங்களை நம்ப போவதில்லை' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்