'பத்து தோல்வி பழனிசாமி; மக்கள் உங்களை நம்ப போவதில்லை' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

26


மயிலாடுதுறை: ''பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் இனி நம்ப போவதில்லை'' என முதல்வர் ஸ்டாலின், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகையில் தெரிவித்தார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தின் மருமகன் என்ற உரிமையில், உங்களில் ஒருவனாக நான் இங்கு வந்திருக்கிறேன். இன்று ரூ.48 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளேன்.

மழையையும் பொருட்படுத்தாமல் மயிலாடுதுறை மக்கள் என்மீது அன்பு மழை பொழிந்தனர். பழனிசாமி தனது 4 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தார்? 2018ம் ஆண்டுடன் ஏழை பெண்கள் திருமண திட்டத்தை நிறுத்தியவர் தான் பழனிசாமி. மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தியவரும் அவர் தான். அவரு எனக்கு டாட்டா பைபை சொல்கிறாராம்.

குட் பை



10 தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ம் ஆண்டில் இருந்து தமிழக மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா பைபை சொல்லிட்டு தான் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட் பை சொல்லிட போகிறார்கள். மக்கள் இனி உங்களை ஒரு போதும் நம்ப போவது இல்லை. உங்கள் கட்சி காரர்களே உங்களை தேர்தல் களத்தில் நம்ப தயாராக இல்லை.

சுந்தரா டிராவல்ஸ்




ஒரு காமெடி திரைப்படத்தில் வரும். அதற்கு எல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டாய். அந்த மாதிரி அவர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். இதை தெரிந்து கொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஒரு படம் இருக்கிறது. படத்தின் பெயர் சுந்தரா டிராவல்ஸ் என்று தெரியும். அந்த மாதிரி, பஸ்ஸை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார். அந்த பஸ்சில் இருந்து புகை வரும் மாதிரி, அவர் வாயில் இருந்து பொய்யும், அவதூறுகளும் வந்து கொண்டு இருக்கிறது.



https://www.youtube.com/embed/AQrPuZY06YU

அடமானம்



மக்கள் உங்களை நம்பி தயாராக இல்லை. விரக்தியில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் தமிழக மக்கள் மீதே குற்றச்சாட்டுகளை வைக்கிறார். கொச்சைப்படுத்துகிறார். என்ன என்றால் ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்து விட்டீர்கள் என்று பேசுகிறார். மக்கள் ஏமாற வில்லை. பா.ஜ., வை நம்பி நீங்கள் தான் ஏமாந்து போய் இருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டில் இருந்து காப்பாற்றுவதற்காக, அ.தி.மு.க.,வை டில்லியில் போய் அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டு வந்து இருக்கிறீர்கள்.

கதவை தட்டி...!



தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. 10 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ., கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்ததா? கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் பா.ஜ., அரசு அரசியல் செய்கிறது. 3,4 கார்கள் மாறி அமித்ஷா வீட்டு கதவை தட்டியது பற்றி, உதயநிதி தான் முதன் முதலில் எடுத்து பேசினார். நீங்கள் அமித்ஷா வீட்டு கதவை தட்டினால் என்ன தவறு என்று வெட்கம் இல்லாமல் கேட்கிறீர்கள்.

அரசை காக்க வேண்டும்



யாருக்காக தட்டினீர்கள், உங்கள் கட்சியை அடமானம் வைக்க தானே தட்டினீர்கள்.
@quote@ மக்களை பொறுத்த வரைக்கும், ஸ்டாலின் கையில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும். சுயநலத்திற்காக அந்நிய சக்திகளை தமிழகத்திற்குள் விடமாட்டார். quote

தடுத்து நிறுத்துவார் என்று நம்பிக்கையோடு ஓட்டளித்தனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன். உறுதியோடு சொல்கிறேன். அடுத்து அமைய போவது திராவிட மாடல் ஆட்சி என்று இப்பொழுதே உறுதி அளிக்கிறேன். உங்களை காக்கும் அரசை நீங்கள் காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

8 புதிய அறிவிப்புகள்



* தரங்கம்பாடி-மங்கநல்லூர் சாலை ரூ.45 கோடி மதிப்பில் இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படும்.


* குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்



* நீடூர் ஊராட்சியில் ரூ.85 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம்.


* சுதந்திரப் போராட்டத் தியாகி நாகப்பன் சிலை நிறுவப்படும்.


* தாளம்பேட்டை, வெள்ள கோவிலில் ரூ.8 கோடியில் கடற்கரையோர கட்டமைப்புகள் செய்யப்படும்.


* சீர்காழி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம்.


* பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சீர்காழியில் தேர் கீழ வீதி, மேல விதி, தெற்கு மற்றும் வடக்கு வீதிகளில் ரூ.8 கோடியில் மழை நீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாடு பணிகள் நடைபெறும்.

Advertisement