சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை கேரள டாக்டர் தம்பதிக்கு 'டிமாண்ட்'

பீஜிங்: இந்தியாவின் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையை, கேரள டாக்டர் தம்பதி சீனாவில் பிரபலப்படுத்தி வருகின்றனர்.
மூலிகை மருந்துகள், மசாஜ் சிகிச்சை, உணவுமுறை, யோகா போன்றவற்றை உள்ளடக்கியது ஆயுர்வேதம்.
நீண்ட பாரம்பரியமுள்ள ஆயுர்வேதத்தை, இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் நாடி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் முகமது ஷபீக், அவரது மனைவி டாக்டர் டேன் ஆகியோர் இணைந்து, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறை மற்றும் அதற்கான பயிற்சியை சீனாவில் வழங்கி வருகின்றனர்.
இதில், பிரபலமான சிரோதராவும் அடங்கும். இது மெதுவாகவும், சீராகவும் நெற்றியில் மருந்து எண்ணெய் சொட்டும் ஒரு பாரம்பரிய செயல்முறையாகும்.
கேரளாவின், 600 ஆண்டு பழமையான 'சங்கம்பள்ளி குருக்கள்' என்ற பாரம்பரிய ஆயுர்வேத குடும்பத்தைச் சேர்ந்தவர் முகமது ஷபீக். புதுச்சேரியில் பயிற்சி பெற்றபோது, பல சீன நோயாளிகள் ஆயுர்வேத சிகிச்சைக்கு விரும்பி வந்ததால், 2016ல் சீனாவுக்குச் சென்று மருத்துவமனையை துவக்கினார்.
நம் நாட்டின் ஆயுர்வேத சிகிச்சை முறையும், பாரம்பரிய சீன மருத்துவமும் பல ஒற்றுமைகளை கொண்டிருப்பதே, சீனர்கள் இதை அதிகம் விரும்ப ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.
மேலும், தங்கள் ஆயுர்வேத பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து, பல மாணவர்கள் பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் சிகிச்சை மையங்களை திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




மேலும்
-
கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!
-
ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன்
-
கீழடி அகழாய்வு: சர்ச்சைகளின் உண்மை நிலையும் மத்திய அரசின் பங்கும்
-
நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!
-
'பத்து தோல்வி பழனிசாமி; மக்கள் உங்களை நம்ப போவதில்லை' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
ஒரு வழியாக பழுது நீக்கியாச்சு; ஜூலை 23ல் நாடு திரும்புகிறது பிரிட்டீஷ் போர் விமானம்!