'சார்ஜிங்' மையங்களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்க முடிவு

4

சென்னை: மின் வாகனங்களுக்கு, 'சார்ஜிங்' மையம் அமைக்க இடம் தேர்வு செய்யவும், இப்பணியை கவனிக்க தனி அதிகாரியையும் நியமிக்குமாறு, கலெக்டர்களுக்கு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் பெசன்ட் நகர், செம்மொழி பூங்கா உட்பட ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.



நாடு முழுதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பலரும் வாங்கி வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு தடையின்றி, சார்ஜிங் வசதி கிடைக்க, நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ., துாரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையமும், நகரங்களில், 3 கி.மீ.,க்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள, 100 துணைமின் நிலையங்களில், சார்ஜிங் மையங்களை அமைக்க, மின் வாரியம், 2023ல் முடிவு செய்தது. இதற்காக இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், நிதி நெருக்கடியால் அமைக்கப்படவில்லை.


மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், பசுமை மின் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி இந்நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, மின் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் இடங்களை தேர்வு செய்யவும், சார்ஜிங் மைய பணிகளை நிர்வகிக்கவும், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து சார்ஜிங் மையம் அமைக்க ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், முகப்பேர் மங்கல் ஏரி பார்க்கிங், 133வது வார்டில் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அதே வார்டில் சோமசுந்தரம் பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, மெரினா கடற்கரை பூங்கா, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, 102து வார்டில் போகன்விலா பூங்கா ஆகிய இடங்களில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.


இந்த இடங்களில், தனியார் நிறுவனம் வாயிலாக சார்ஜிங் மையம் அமைக்கப்படும். சார்ஜிங் மையத்தில் கிடைக்கும் வருவாயை, சென்னை மாநகராட்சி, மின் வாரியம், தனியார் நிறுவனம் ஆகிய மூன்றும் பகிர்ந்து கொள்ளும்.


@block_P@

சென்னையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்



சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து சார் ஜிங் மையம் அமைக்க, ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் பார்க் கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், முகப்பேர் மங்கல் ஏரி பார்க்கிங், 133வது வார்டில் மாநக ராட்சி விளையாட்டு மைதானம், அதே வார்டில் சோமசுந்தரம் பூங்கா. தேனாம்பேட்டை பூங்கா, மெரினா கடற்கரை பூங்கா, மயிலாப்பூர் நாகேஸ் வரராவ் பூங்கா, 102து வார்டில் போகன்விலா பூங்கா ஆகிய இடங்களில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. block_P

Advertisement