தாய் மாயம்: மகன் புகார்



குளித்தலை, குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர் பஞ்., செக்கனம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம், 58;

இவரது தாயார் தங்கம்மாள், 85; வயது முதிர்வால் வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர்,

மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன தன் தாயாரை கண்டுபிடித்து தருமாறு, மகன் ரத்தினம் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement