சிறையில் அடைக்கப்படுவார்!

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தன்னை ஒரு மன்னராக நினைக்கிறார். அவரது ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், ஆட்சியில் இருந்து பா.ஜ.,வை விரட்டியடிப்போம். தன் தவறுகளுக்காக ஹிமந்த பிஸ்வ சர்மா நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவார்.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
துளி கூட தெரியாது!
நம் ஆயுதப்படைகளை குறைத்து மதிப்பிடுவதையே காங்., - எம்.பி., ராகுல் வழக்கமாக வைத்துள்ளார். அவருக்கு வெளியுறவு கொள்கை பற்றி துளி கூட தெரியாது. நம் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றால் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை தான் சந்திக்க முடியும். இத்தாலி பிரதமரையா சந்திக்க முடியும்?
அஜய் அலோக், தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
நாடகமாடும் மம்தா!
இக்கட்டான தருணங்களில், 'பெங்காலி' என முழங்குவதையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாடிக்கையாக வைத்துள்ளார். உண்மையிலேயே, மேற்கு வங்கம் மீது அக்கறை இருந்திருந்தால், பெங்காலி பேசாத நபர்களை அவர் எம்.பி., ஆக்கிருப்பாரா? தேர்தல் வந்து விட்டதால், மக்கள் மீது பாசம் இருப்பது போல் மம்தா நாடகமாடுகிறார்.
சுகந்தா மஜும்தார், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு