உலக செஸ்: திவ்யா அபாரம்

பதுமி: ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் திவ்யா, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். திவ்யா 1.0-0 என முன்னிலையில் உள்ளார். இன்றைய இரண்டாவது போட்டியில் 'டிரா' செய்தால் காலிறுதிக்கு செல்லலாம்.
மற்ற வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி, வைஷாலி தங்களது முதல் போட்டியை 'டிரா' செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குண்டுவெடிப்பு கைதிக்கு 5 நாள் 'போலீஸ் கஸ்டடி'
-
போலீசார் தாக்கியதில் மாணவன் உடல் நலம் பாதிப்பு; நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு
-
சுரேஷ் கோபி படத்துக்கு சென்சார் சான்று கிடைத்தது
-
தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு பின்பற்ற காங்., கோரிக்கை
-
குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது: ஐகோர்ட்
-
இக்கட்டான நிலையில் இந்திய கால்பந்து சுனில் செத்ரி வேதனை
Advertisement
Advertisement