தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு

சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் இளைஞர் நலத்துறை சார்பில் 2025 - 26 ம் கல்வியாண்டில் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு நடந்தது.

கல்லுாரி இளைஞர் நலத்துறை மாணவ ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷினி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். பல்வேறு துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் நடனம், பாடல், கவிதை வாசித்தல், மேடைப்பேச்சு, யோகா, சிலம்பம் என தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

இளைஞர் நலத்துறை மாணவ ஒருங்கிணைப்பாளர் சந்தியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, நந்தினி, உமாதேவி, இளைஞர் நலத்துறை உறுப்பினர்கள் செய்தனர். கல்லுாரி அனைத்து துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், 2725 மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement