குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

10


புதுடில்லி: அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அமெரிக்காவில் உள்ள டார்க்கெட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இந்திய பெண் ஒருவர் சுமார் 7 மணிநேரம் பொருட்களை வாங்குவது போல நடித்துள்ளார். பிறகு, சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார்.


இதை கண்டறிந்த ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் எடுத்து வந்த பொருட்களுக்கு பணம் செலுத்த அந்தப் பெண் தயாராக இருந்த போதும், போலீசாருக்கு அவருக்கு கைவிலங்கிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.


கடந்த மே 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை



இந்த நிலையில், குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவு:
அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை, தாக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், விசாவும் ரத்து செய்யப்படும். எதிர்காலத்தில் அமெரிக்கா நுழைவதற்கான விசாவை பெறும் தகுதியை இழக்க நேரிடும். அமெரிக்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கை வெளிநாட்டவர்களும் மதித்து, கடைபிடிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement