ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 5 மாடி அடுக்குமாடிகளை கொண்டது. இந்த மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 மாடி ஷாப்பிங் மாலில், ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழு அறிக்கை தரப்படும் என அந்நாட்டு கவர்னர் கூறியதாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவத்துள்ளது. ஷாப்பிங் மால் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (2)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
17 ஜூலை,2025 - 17:17 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17 ஜூலை,2025 - 12:29 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement