நெடுஞ்சாலை ஓரம் லாரியில் வந்து கொட்டப்படும் கழிவுகள்

வேடசந்துார்: வேடசந்துார் ரங்கமலை கணவாய் அருகே நெடுஞ்சாலை ஓரம் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளால் அந்தப் பகுதியே குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதன் மீது நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை 80 கி.மீ., துாரம் கொண்டது. இந்தசாலையில் மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது ரங்கமலை கணவாய். ஆள் நடமாட்டமற்ற இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் மக்கள் கடந்து செல்லவே அச்சப்படுவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவழிச் சாலை நான்கு வழிச்சாலை யாக மாற்றப்பட்ட பிறகு வாகன போக்கு வரத்துகள் நிறைந்து இன்று மாவட்டத்தின் முக்கிய எல்லை பகுதியாக விளங்குகிறது.
எல்லையில் இருந்து மாவட்ட பகுதிக்குள் ஆயிரம் மீட்டர் துாரத்தில் போலீஸ் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செக் போஸ்ட் ஆறு மாதங்களாக மூடி கிடக்கிறது. இதனாலும் கணவாய் பகுதியில் லாரிகளை நிறுத்தி வெங்காய சருகு, முட்டை கழிவுகள், வேஸ்ட் துணி பண்டல்கள், வாழை கழிவுகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை தொடர்ந்து கொட்டி செல்கிறார்கள்.
அரை கி.மீ., நீளத்திற்கு கொட்டிச் செல்வதால், டூவீலர் ,பஸ்களில் செல்வோர் பாதிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனத்தினர் இந்த கழிவு குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்.இதோடு குப்பை கழிவுகளை கொட்டுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை மேடாக
எஸ்.சக்திவேல், ஓய்வு ஆசிரியர், கல்வார்பட்டி: கல்வார்பட்டியின் மையப் பகுதியில் தான் இந்த நெடுஞ்சாலை செல்கிறது. ஒரு கிலோமீட்டர் துாரம் உள்ள மாவட்ட எல்லை பகுதியில் ரோட்டோரங்களில் குப்பை கழிவுகளை, வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். மலைப்பகுதி என்பதால் இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் வாகனங்களை ஓய்வுக்காக நிறுத்துவது போல் நிறுத்தி கழிவு பொருட்களை கொட்டி செல்கின்றனர். நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர் தனிக் கவனம் செலுத்தி குப்பை கொட்டும் வாகனங்களை கண்டுபிடித்து எச்சரித்து அனுப்புவதோடு குப்பை மேடாக ஆகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நடவடிக்கை எடுங்க
என்.சுரேஷ், சமூக ஆர்வலர், வேடசந்துார்: கனவாய் பகுதி, நெடுஞ் சாலை ஓரங்களில் குப்பை முட்டை கழிவுகள் மட்டுமின்றி மருத்துவக் கழிவு, கெட்டுப்போன வெங்காய மூடைகளையும் கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலம் துவங்கினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கண்காணித்து கழிவுகள் கொட்டிச் செல்வதை தடுக்க வேண்டும். அதையும் மீறி கொட்டுவோர் மீது போலீசில் புகார் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதம் தொடர் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இந்த கழிவுகள் கொட்டி செல்வதை தடுக்க முடியும் என்றார்.
மேலும்
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
-
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை