துண்டுச்சீட்டு முறையில் ரேஷன்; மளிகை பொருள் வாங்க வற்புறுத்தல்

கன்னிவாடி: கன்னிவாடி பகுதியில் ரேஷன் கடைகளில் நடக்கும் விதிமீறல், அலைக்கழிப்பு, ஊழியர்களின் முறைகேடு பிரச்னைகளால் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
விலைவாசி உயர்வு எதிரொலியாக ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள், ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்கள் ஆதாரமாக நம்பி உள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் அரிசி இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. பருப்பு, பாமாயில், கோதுமை வழங்கலில் குளறுபடி நீடிக்கிறது. கன்னிவாடி, கசவனம்பட்டி பகுதி ரேஷன் கடைகளில் உரிய பில் வழங்குவதில்லை. விதிமீறி துண்டு சீட்டில் சுருக்கமாக(குழப்பும் வகையில்) குறியிட்டு வழங்குகின்றனர். இவற்றை கார்டுதாரர் புரிந்து கொள்ள முடிவதில்லை.
ஸ்மார்ட் கார்டுகளில் பதிவு செய்த பொருள், அளவு வினியோகத்தின்போது மாறுபடுகின்றன. குறுந்தகவல் வருவதிலும் தாமதத்தால் ஏமாற்றம், ஊழியர்களுடன் வாக்குவாதம், பிரச்னைகள் தொடர்கின்றன.மளிகை பொருட்கள் வாங்க வற்புறுத்துவதால் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
அலைக்கழிப்பால் அவதி
சிவராமன், கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி: பெரும்பாலும் கிராம கடைகள் பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது சில மணி நேரம் மட்டுமே வினியோகம் நடக்கிறது. தற்காலிக பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டபோதும் பிற கடைகள், கிட்டங்கி, லாரிகளுக்கான வினியோக பணி உள்ளதாக கூறி திறப்பு நேரத்தை குறைத்து விடுகின்றனர்.
குளறுபடி திறப்பு நேரத்தால் ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருக்கும் அவலம் உள்ளது. பெரும்பாலும் கார்டுதாரர்களை வெறொரு நாளில் வரும்படி கூறி திருப்பி அனுப்பி அலைக்கழிப்பிற்கு உள்ளாக்குகின்றனர்.
வினியோக பணியில் துண்டுச்சீட்டு முறை தவிர்க்க அரசு அறிவுறுத்தினாலும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தாராளமாக பயன்பாட்டில் உள்ளது.
முறைகேடு தாராளம்
மணிவண்ணன்: கூலித்தொழிலாளி, வெல்லம்பட்டி: சோப், உப்பு, மஞ்சள், மசாலா துாள் போன்ற மளிகை பொருட்கள் வாங்க வற்புறுத்துகின்றனர்.
மறுக்கும் சூழலில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, வழங்கலை தாமதப்படுத்தலில் ஈடுபடுகின்றனர். வழங்காத கார்டுகளுக்கு இரு மாதங்களுக்கு உரிய பருப்பு, பாமாயில் தரப்படும் என அரசு, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பல ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது இல்லை. வழங்கல் பதிவு செய்தபோதும் துண்டுச்சீட்டில் அரிசி மட்டுமே குறிப்பிடுகின்றனர். நபருக்கான ஒதுக்கீடு அளவும் குறைத்து வினியோகம் நடக்கிறது. கோதுமை வினியோகம் முழுமையாக மறைக்கப்படுகிறது. கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை.
குறுந்தகவலில் முறைகேடு வெளிப்பட்ட நிலையில் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலனில்லை. சிவில் சப்ளை துறை அதிகாரிகள் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மேலும்
-
மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16
-
'இயல்பைவிட கை விரல் இருப்பதால் பணி நிராகரிக்கக்கூடாது' உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கணித உபகரண பெட்டி அனைத்துமாணவர்களுக்கும் வழங்க உத்தரவு: தினமலர் செய்தி எதிரொலி
-
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
-
மதுரையில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை இரு 'சீனியர்'கள் சரண்: இருவர் கைது மன்னிப்பு கேட்டும் எரித்து கொன்ற கொடூரம்
-
அறிவியல் யுகத்தில் குடிநீர் கிடைப்பதிலும் பாகுபாடா: உயர்நீதிமன்றம் அதிருப்தி