செங்கல்பட்டு: புகார் பெட்டி சாலையோரம் அபாய பள்ளம் மண் கொட்டி சீரமைக்கப்படுமா?

வெடால் கிராமத்தில், நல்லுார் - வில்லிப்பாக்கம் இடையே செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதில், வெடால் - கடுக்கலுார் இடையே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் அருகே, சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் தொடர்கிறது.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மண் கொட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.அருணாச்சலம்.
செய்யூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement