அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

புதுச்சேரி : எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் ஓவியக் கலை கண்காட்சி நடந்தது.

தலைமை ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பள்ளி வட்டம் - 2, பள்ளி துணை ஆய்வாளர் செல்வி சிறப்புரை ஆற்றினார். பல்வேறு வகையில், வரையப்பட்ட ஓவியக் கலைகள், பார்வையாளர்களை கவர்ந்தது.

கண்காட்சியில், ஆசிரியர்கள், சுப்புலட்சுமி, மாலதி, ஆர்த்தி, குமாரி, சுதாமதி, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement