சுஜூகி மோட்டார் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா

தேனி: கம்பம் சுஜூகி மோட்டார் சைக்கிள் ஷோரூம் ராம் சுஜூகி நிறுவனத்தை தேசிய செட்டியார் பேரவை நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா திறந்து வைத்தார்.

இ.எஸ். சீனிவாசன் முன்னிலை வகித்தார். கம்பம் நகராட்சித் தலைவர் வனிதா நெப்போலியன், ஏல விவசாயி ஜெயகுமார், அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன் குத்து விளக்கு ஏற்றினார்.

கே.எம்.சி., நிர்வாக இயக்குநர் முத்துகோவிந்தன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். சுஜூகி நிறுவன ஏரியா விற்பனை மேலாளர் வேல்குமார், சர்வீஸ் மேலாளர் வைரமுத்து, கே.எஸ்.டி., மஹால் அன்பழகன், ஒப்பந்ததாரர் காசிராஜன், அரிமா நிர்வாகிகள் மாணிக்கம், லால்பகதுார் சாஸ்திரி, பிரகாஷ், என்.பி.ஆர்., தங்கமாளிகை சத்தியநாராயணன், லைப் ஸ்கூல் நாராயணபிரபு, ஜெயாஸ் சோலார் அருள் செல்வன், விஜயபாரதி ஸ்டூடியா முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஷோரூம் உரிமையாளர்கள் ராமராஜ், தனலட்சுமி குடும்பத்தினர் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement