காமராஜர் பிறந்த தின விழா

தேனி: தேனி மாவட்ட அனைத்து அரிமா சங்கங்கள் இணைந்து போடி பங்கஜம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

அரிமா சர்வதேச பகுதித் தலைவர் பாண்டியராஜன், முன்னாள் ஆளுநர் மோகன்சிங், மாவட்ட நிர்வாகிகள் பெஸ்ட் ரவி, ராதாகிருஷ்ணன், ஜெகதீஸ், ராஜேஸ்கண்ணா, முகமதுஷேக் இப்ராஹிம், சத்தியமூர்த்தி, ஆனந்தராஜ், கவிதாலயா சரவணன், முருகேசன், முகமதுதமீம்ராஜா, நவ்ஷாத்,பாண்டியன், சுதந்திரராஜன், ராஜமோகன், நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கு காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் சிலைக்கு வைகை அரிமா சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேனி வைகை அரிமா சங்கத்தின் தலைவர் கணேஷ், அரிமா நிர்வாகிகள் ராஜேஸ்கண்ணா, சரவணராஜா, ஜெகதீஸ் ராதாகிருஷ்ணன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி விழாவில் தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி.,கலைக்கதிரவன் தலைமை வகித்தார். மாணவர் குழு தலைவர்கள் பதவி ஏற்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் 'ராம் வாக்' உட்பட கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.

கொண்டம நாயக்கன்பட்டியில் இருந்து துவங்கிய பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தை பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலையில் செயலாளர் மாத்யூ ஜோயல், நிர்வாகி தமயந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர்கள் காமராஜரின் வேடம் அணிந்தும் அவரின் சாதனைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

ஆண்டிபட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

சித்தார்பட்டி கணேசா நடுநிலைப் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிச் செயலாளர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாணவர்களுக்கான பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தேனி நகர காங்., சார்பில் நேரு சிலை அருகே காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, கொண்டாடப்பட்டது.

மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்ரமணியம், தேனி வட்டாரத் தலைவர் முருகன், மாவட்டச் செலாளர் சம்சுதீன், நகரத் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொது மக்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement