ஆடு, மாடுகள் மாநாடு போல மரங்கள் மாநாடு: சீமான் அதிரடி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடந்த, 2018ல், நா.த.க., - -ம.தி.மு.க., கட்சியினர் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர். சீமான் நேற்று ஆஜரானார். இந்த வழக்கில் வரும் 19ல் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இதன் பிறகு, சீமான் அளித்த பேட்டி:
காங்., வலுவிழந்தபோது அந்த ஆட்சியை தி.மு.க., தாங்கிப்பிடித்தது. கடந்த, 2006ல் பா.ம.க., போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஏன், 2 அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது தி.மு.க.,வின் முந்தைய நிலைப்பாடு.
ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்று தற்போது மாறி விட்டது.
வரும் ஆக., 17ல் மரங்கள் மாநாடு நடத்தி, மரங்களுக்காகவும் பேசப் போகிறேன். ஏற்கனவே மதுரை விரகனுாரில் ஆடு, மாடுகளுக்கு வெற்றிகரமாக மாநாடு நடத்தி, அவைகளுக்காக குரல் கொடுத்தது போல, மரங்களுக்காக பேசி, அவைகளுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறேன்.
'தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதும், திருட்டு பயல்களை வீட்டுக்கு அழைப்பதும் ஒன்று தான்' என்று பேசியவர் காமராஜர். ஆனால், 'தமிழக மக்களை காப்பாற்ற, ஜனநாயகத்தை காப்பாற்ற நீதான் வர வேண்டும்' என்று, கருணாநிதி கையைப்பிடித்து காமராஜர் அழுததாக, தி.மு.க., - -எம்.பி., சிவா பேசியுள்ளார். காமராஜர் இன்று இல்லை என்பதாலேயே இப்படி பேசி இருக்கிறார்.இவ்வாறு சீமான் கூறினார்.



மேலும்
-
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
-
ரூ.6க்கு லாட்டரி டிக்கெட் வாங்கிய கூலித் தொழிலாளி; கோடீஸ்வரனாக்கிய அதிர்ஷ்டம்
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
-
மனிதர்களுடன் உணவை பகிரும் உயிரினம்
-
கொசுவை கொல்லும் லேசர்!
-
பிளாஸ்டிக்கை உண்ணும் அதிசய புழு