காஞ்சிபுரத்தில் 20ம் தேதி பன்னீர்செல்வம் அணி கூட்டம்

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், வரும் 20ல் நடக்க உள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, துவக்கி நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைய முடியாவிட்டால், தனிக்கட்சி துவக்கி, பா.ஜ., அல்லது த.வெ.க., கூட்டணியில் இணைந்து, தேர்தலை சந்திப்பது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க, பன்னீர்செல்வம் முடிவு செய்து உள்ளார்.

இதற்காக மாவட்ட வாரியாக, கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் என, பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

அதன்படி முதல் கூட்டமாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், வரும் 20ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்க உள்ளது.

இதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன், மாவட்ட செயலர் ரஞ்சித்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என, பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

Advertisement