கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 'நமஸ்தே' திட்ட பதிவு முகாம் துவக்கம்

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 'நமஸ்தே' திட்டத்தின் கீழ் கழிவு பொருட்கள் சேகரிப்பவர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் 'நமஸ்தே' மத்திய அரசின் சுகாதார மேலான்மை திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் கழிவு பொருட்கள் சேகரிப்பவர்கள் கணக்கெடுக்கும் பணி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் துவங்கியது.

இத்திட்டத்தில் கீழ் கழிவு பொருட்கள் சேகரிக்கும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தொழில் சார் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தனிப்பட்ட உபகரணங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேரும் பணியாளர்கள் தன் சுய விபரங்களை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு, பள்ளி, உயர்கல்வி உதவித் தொகை மற்றும் பிற தகுதியான திட்டங்களின் நன்மைகள் பயன் பெற பயனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வரிவசூலிப்பவர் முகமதுபாரூக், அலுவலக ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement