ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

9


புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா தொடர்புடைய ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும் அவர் மற்றும் 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


கடந்த 2008ம் ஆண்டு பிப்., 12ல் குருகிராமின் ஆன்கரேஸ்வர் நிறுவனத்திடம் இருந்து வத்ராவுக்கு சொந்தமான நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இதில் மோசடி நடந்ததாக கடந்த 2018ம் ஆண்டு செப்., 1ம் தேதி குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலம் தவறான வாக்குறுதிஅளித்து வாங்கப்பட்டு பிறகு, வாத்ராவின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வணிக ரீதியிலான லைசென்ஸ் பெறப்பட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.


இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில், சொத்துகளை முடக்க நேற்று( ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் வாத்ராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 43 அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.37.64 கோடியாகும்.


மேலும், இந்த வழக்கில், ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் வாத்ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வாத்ரா உள்ளிட்ட11 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Advertisement