அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பகுதியில் பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம் உள்ளிட்ட பகுதியில் செம்மண் குவாரிகள் இயங்கி வருகிறது.
இந்த குவாரிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான கனரக லாரிகள் செம்மண் ஏற்றி செல்கின்றன. லாரிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக இயக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குமளங்குளம் குவாரியில் இருந்து செம்மண் ஏற்றி வரும் லாரிகள் நடுவீரப்பட்டு வழியாக தான் செல்கிறது.
குறிப்பாக, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் அதிவேகமாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். லாரியின் மேல்பகுதி தார்பாய் போட்டுமூடாமல் செல்வதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் மண் பறந்து சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து