காமராஜர் பிறந்த நாள் விழா திருமாவளவன் அன்னதானம்

விருத்தாசலம்: விருத்தாசலம், பாலக்கரையில், வி.சி., கட்சி சார்பில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் நினைவஞ்சலி நிகழ்ச்சி மற்றும் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.

மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் அய்யாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் வி.சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., தனது தந்தை தொல்காப்பியன், முன்னாள் முதல்வர் காமராஜர் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் மதுசூதனன், தனராஜ், நகர பொருளாளர் தனசேகர், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், ஒன்றிய பொருப்பாளர்கள் அய்யாதுரை, ரஞ்சித், ராகுல், ரமணா, துரைமுருகன், பாபுஜி, பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement