தேடி சென்று நடிகரை சந்தித்த ரங்கசாமி; நாடி வந்த பழனிசாமியை தவிர்த்தது ஏன்?

புதுச்சேரி: சென்னைக்கு சென்று நடிகரை சந்திக்க ஆர்வம் காட்டிய முதல்வர் ரங்கசாமி, கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமியை சந்திக்காமல் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து என்.ஆர். காங்., போட்டியிட்டது. பின், கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது.
தற்போது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க., திரும்பி உள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை பா.ஜ., - அ.தி.மு.க., - என்.ஆர். காங்., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திப்பது உறுதியாகி விட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி புதுச்சேரிக்கு வந்து நோணாங்குப்பத்தில் உள்ள ஓட்டலில் கடந்த 11, 12ம் தேதிகளில் 2 நாட்கள் தங்கியிருந்தார்.
கடந்த 2021ல், முதல்வருக்கான மரபை (புரட்டோகால்) மீறி, புதுச்சேரியில் இருந்து 127 கி.மீ., துாரம் பயணம் செய்து, சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கே சென்று நடிகர் விஜயை சந்தித்து பேசிய ரங்கசாமி, புதுச்சேரிக்கு வந்த கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமியை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை.
நடிகரை விட, முன்னாள் முதல்வரான பழனிசாமி எந்த விதத்தில் குறைந்து விட்டார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிரணியில் உள்ளார்; அவரை ரங்கசாமி சந்திக்காமல் தவிர்ப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால், கூட்டணியில் உள்ள பிரதான கட்சியின் தலைவர் பழனிசாமியை சந்திக்காமல் தவிர்த்தது ஏன்?
தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று குடைச்சல் தந்தால் ரங்கசாமி என்ன செய்வார்? எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி கொண்டும், ஊர் நியாயம் பேசிக் கொண்டும் இருக்கும் புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?


மேலும்
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 1,563 பேர்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
-
வெளிநாட்டு தபால் பார்சலில் கடத்தல்: ரூ.48 லட்சம் இ-சிகரெட் பறிமுதல்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை