அறிவியல் துளிகள்

1. எதிர்மறை சிந்தனை, மன அழுத்தம் ஆகியவை ஆஸ்துமாவை அதிகரிக்கும் என்று இத்தாலியில் உள்ள கத்தோலிக்கப் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 301 பேரை 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்து இதைக் கண்டறிந்துள்ளனர்.
Latest Tamil News
2. பூமியைத் தாக்கும் என்று அஞ்சப்பட்ட விண்கல் 2024 YR4. ஆனால் இது, 2032இல் நிலவைத் தாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால் ஏற்படும் வெடிப்புகளால் விண்ணில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
Latest Tamil News
3. இறந்த நட்சத்திரங்களின் மிச்சமாக இருப்பது துாசு மேகங்களாலான நெபுலா. பூமியில் இருந்து 5,500 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது பூனை பாத நெபுலா (Cat's paw nebula). சமீபத்தில் இதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக அழகாகப் படம் பிடித்துள்ளது.
Latest Tamil News
4. தென் ஆப்பிரிக்காவின் ஆன்டிஸ் மலைத்தொடர்களில் வாழும் 3 புதிய தவளை இனங்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவற்றுக்கு பிரிஸ்டிமண்டிஸ் சிங்குவெலஸ், பிரிஸ்டிமண்டிஸ் நுனேஸ்கோர்டேசி, பிரிஸ்டிமண்டிஸ் யோன்கே என அறிவியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
Latest Tamil News
5. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் மனிதர்கள், கருவிகள் சந்திக்கும் முதல் பிரச்னை நிலவில் உள்ள தூசு. இது குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இந்தத் துாசுகள் பூமியின் நகரங்களில் உள்ள காற்றைக் காட்டிலும் குறைவான ஆபத்தையே மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.

Advertisement