பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்
விழுப்புரம்: பாராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் செய்திக்குறிப்பு :
பராமரிப்பு பணி காரணமாக, சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு புறப்படும் தாம்பரம், விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) வரும் 19, 22ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தோடு நிறுத்தப்படும்.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு மதியம் 1:40 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) வரும் 19, 22ம் தேதிகளில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:55 மணிக்கு புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படுகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) உள்ளிட்ட ரயில்கள் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 1,563 பேர்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
-
வெளிநாட்டு தபால் பார்சலில் கடத்தல்: ரூ.48 லட்சம் இ-சிகரெட் பறிமுதல்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை