ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்

5


விழுப்புரம்: ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள். அந்த நேரத்தில் உங்கள் யோசனைகளையும் கேட்கிறேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று யோசனை சொல்வீர்களா?

ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டது, யார் வைத்தார்கள். யார் இங்கே கொண்டு வந்து சார்ஜ் போட்டார்கள், யார் சொல்லி வைத்தார்கள் என்பது எல்லாம் விசாரணையில் இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில், அது அம்பலத்திற்கு வரும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.



இதையடுத்து, நிருபர் ஒருவர், ''இதில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு, ''சந்தேகம் இருக்கிறது. உங்கள் மேல் தான் இருக்கிறது'' என ராமதாஸ் பதில் அளித்துவிட்டு சிரித்தார்.


பின்னர், ''போலீசார் விசாரணை தொடங்கி விட்டனர். இன்று காலையில் 8 பேர் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் சைபருக்கு கீழே மைனசாக போய்ட்டாங்க, சைபர் கிரைம் ஒன்று தமிழகத்தில் ஒன்று இருக்கிறதா, இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Advertisement