8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது

புதுடில்லி: தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. தலைநகரங்களின் பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
'சுவச் சுவேக்ஷான்' திட்டத்தின் கீழ், கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
குப்பைகளை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், நிர்வகித்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சிசெய்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தூய்மை நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ம.பி.,யின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் சத்தீஸ்கரின் அம்பிகாபூரும், 3வது இடத்தில் கர்நாடகாவின் மைசூருவும் இடம்பிடித்துள்ளன.
வெற்றி பெற்ற மாநகர நிர்வாகங்களுக்கு டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மிகப்பெரிய தூய்மையான நகரங்கள் ( 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை)
தூய்மையான நகரம்; ஆமதாபாத், குஜராத்,
அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; ராய்ப்பூர், சத்தீஸ்கர்,
மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; நவி மும்பை, மஹாராஷ்டிரா,
புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; ஜபல்பூர், மத்திய பிரதேசம்,
திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்;சூரத், குஜராத்,
தூய்மையான நடுத்தர நகரங்கள் (3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை)
தூய்மையான நகரம்; உஜ்ஜயின், மத்திய பிரதேசம்
அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; மதுரா - பிருந்தாவன், உத்தரபிரதேசம்
மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; சந்திரபூர், மஹாராஷ்டிரா
புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; ஜான்சி, உத்தரபிரதேசம்,
திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்; லத்தூர், மஹாராஷ்டிரா
தூய்மையான சிறிய நகரங்கள் (1 லட்சம் முதல் 3 லட்சம் மக்கள் தொகை)
தூய்மையான நகரம்; டில்லி மாநகராட்சி, டில்லி,
அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; ஒராய், உத்தரபிரதேசம்,
மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; திருப்பதி, ஆந்திர பிரதேசம்,
புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; திவாஸ், மத்திய பிரதேசம்,
திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்; நாகடா, மத்திய பிரதேசம்,
தூய்மையான தலைநகரங்கள்
தூய்மையான தலைநகரம்; போபால், மத்திய பிரதேசம்,
அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; சென்னை, தமிழகம்,
மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; ராஞ்சி, ஜார்க்கண்ட்,
புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; மும்பை, மஹாராஷ்டிரா
திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்;சண்டிகர், சண்டிகர்.







மேலும்
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 1,563 பேர்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
-
வெளிநாட்டு தபால் பார்சலில் கடத்தல்: ரூ.48 லட்சம் இ-சிகரெட் பறிமுதல்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை