இம்பால் கிளம்பிய இண்டிகோ விமானத்தில் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 6E 5118 ஒன்று பயணிகளுடன் டில்லி விமான நிலையத்தில் இருந்து, மணிப்பூர் தலைநகர் இம்பால் நகருக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில் விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்ததால், உடனடியாக டில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, வழக்கமான நடைமுறைகள் பின்பற்றி, தேவையான பரிசோதனைகளை செய்த பிறகு மீண்டும் இம்பாலுக்கு கிளம்பிச் சென்றதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு வழக்கம் போல் எப்போதும் முக்கியத்தவம் அளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று டில்லியில் இருந்து கோவாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் இன்ஜின் கோளாறு கண்டறியப்பட்டு மும்பையில் தரையிறக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை யாரும் நோட்டமிடவில்லை: போலீசார் விளக்கம் போலீசார் விளக்கம்
-
எங்கள் நெருக்கடிகளை சொல்கிறோம் அவமானப்படுவதாக கருதக்கூடாது திருமாவளவன் புது விளக்கம்
-
தலித் மக்களுக்கு திருமா துரோகம்
-
தமிழக உளவுத்துறை நீண்ட உறக்கத்தில் உள்ளதா? ஹிந்து முன்னணி சந்தேகம்
-
சிறுமியை பாலியல் கொடுமை செய்த கொடூரன் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்..
-
குழந்தையின் நலனுக்காக தீர்ப்பை மாற்றலாம்: விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து