உலக விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலியா அபாரம்
புருனோ: செக்குடியரசில் நடக்கும் பெண்கள் (19 வயது) உலக கோப்பை கூடைப்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 95-46 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியா, ஹங்கேரி அணிகள் மோதுகின்றன.
பவுச்சர்டு 'குட் பை'
மான்ட்ரியல்: கனடா டென்னிஸ் வீராங்கனை பவுச்சர்டு. விம்பிள்டனில் (2014) பைனல் வரை சென்ற இவர், பில்லி ஜீன் கிங் கோப்பை (2023) வென்ற கனடா அணியில் இடம் பிடித்திருந்தார். மான்ட்ரியல் ஓபனுடன் (ஜூலை 27-ஆக. 7) ஓய்வு பெறுகிறார்.
பெல்ஜியம் 'ஹாட்ரிக்'
லில்லி: பிரான்சில் நடக்கும் ஆண்களுக்கான (18 வயது) 'யூரோ' ஹாக்கி லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 2-1 என பிரான்சை வென்றது. ஏற்கனவே ஸ்காட்லாந்து, நெதர்லாந்தை வீழ்த்திய பெல்ஜியம், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் இத்தாலி
ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதியில் இத்தாலி, நார்வே அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 1997க்கு பின் இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா, 23 வயதுக்குட்பட்ட பெங்கால் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். பெங்கால் அணிக்காக 142 முதல் தர போட்டியில் விளையாடிய இவர், கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார்.
* யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடருக்கு தயாராக, உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவில் நடக்கவுள்ள மான்ட்ரியல் ஓபனில் (ஜூலை 27 - ஆக. 7) இருந்து விலகினார். இவர், சின்சினாட்டி ஓபனில் (ஆக. 7-18) பங்கேற்பார்.
* இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இதில் தன்வி சர்மா, அன்ஷ் நேகி, ரூனக் சவுகான், தன்வி ரெட்டி, காயத்ரி, மான்சா, விஷ்ணு கேதர், கீர்த்தி மன்சாலா உள்ளிட்ட 19 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
* முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன் 52, கோகுலம் கேரளா எப்.சி., சீனியர் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்காக 30 போட்டியில் விளையாடிய இவர், 350 கிளப் போட்டிகளில் பங்கேற்று, 200 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.
* சுவிட்சர்லாந்தில் நடக்கும் சுவிஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காதே, விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி 3-6, 6-7 என ஜெர்மனியின் ஜேக்கப் ஷ்னைட்டர், மார்க் வால்னர் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் விஜய்இணைவார் என்ற நம்பிக்கை இல்லை சொல்கிறார் கார்த்தி எம்.பி.,
-
உமையநாயகி அம்மன் கோயிலில் ஆடி முழுவதும் நடை அடைப்பு
-
குருவாயூர் - -மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
-
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
-
'நிபா'வை தொடர்ந்து பரவுது பன்றிக்காய்ச்சல்
-
குடிநீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி