பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் விஜய்இணைவார் என்ற நம்பிக்கை இல்லை சொல்கிறார் கார்த்தி எம்.பி.,

1

சிவகங்கை:சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி கூறியதாவது: காமராஜர் குறித்த தி.மு.க., சிவா எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு பற்றிய விமர்சனங்கள் தேவையற்றது. அவரின் விளக்கத்தை அடுத்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அ.தி.மு.க.,வில் பெரிய கட்சிகளான டொனால்ட் ட்ரம்ப் ரிபப்ளிக் பார்ட்டி போன்றவை இணைய வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மக்கள் தன்னெழுச்சியாக வரவில்லை. அமைப்பு ரீதியாக அக்கட்சிக்கு பெரிய பலம் உள்ளது. அதை வைத்து கூட்டம் கூட்டுகிறார்கள்.

அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளதை அக்கட்சி தொண்டர்களே ஏற்கவில்லை. விஜய்க்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியை வலுப்படுத்தவே விஜயை கூட்டணிக்கு அழைக்கின்றனர். விஜய் முதல்வர் வேட்பாளராக பிரகடனம் செய்து வருகிறார். அவர் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் இணைவார் என நம்பிக்கையில்லை. திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை தீவிரமாக நடக்கிறது. அதுபோன்று கொடநாடு வழக்கையும் தீவிரம் காட்ட சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றார்.

Advertisement