தெற்கு குறுமைய சதுரங்கம்; 268 பேர் பங்கேற்று ஆர்வம்

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை, வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொறுப்பேற்று நடத்துகிறது.

அவ்வகையில், முத்துார் விவேகானந்தா வித்யாலயாவில், 11, 14, 17 மற்றும் 19 வயது ஆகிய நான்கு பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டது. 160 மாணவர், 104 மாணவியர் என மொத்தம், 268 பேர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் சண்முகம், சதுரங்க போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் சக்திவேல், செயல் இயக்குனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். முதுநிலை தமிழாசிரியர் லோகேஷ் வரவேற்றார்.

கொங்கு வேளாளர் பள்ளி முதல்வர் விஷ்ணுபிரியா, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜ் மற்றும் சதுரங்க பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் நந்தினி, செந்தில்குமார், சிவசக்தி நாட்ராயன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். கொங்கு வேளாளர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நன்றி கூறினார்.

Advertisement