அரசு துவக்கப்பள்ளியில் அதிகாரிகள் விசாரணை
சேவூர்; சேவூர் அருகே ஒச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமூக விரோதிகளின் அட்டகாசத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.
அவிநாசி, சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ஒச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 28 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் பள்ளிக்குள் இளைஞர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து, மது அருந்துவது, மாணவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை குழாய், வாஷ்பேஷின் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற பொதுமக்களின் புகார் தொடர்பான செய்தி, நேற்று நம் நாளிதழில், புகைப்படத்துடன் வெளியானது.
இதையடுத்து, மாவட்ட கல்வித்துறை அலுவலரின் உத்தரவுக்கேற்ப, வட்டார கல்வி அலுவலர் சுந்தர்ராஜ், விசாரணையை துவக்கியுள்ளார்.
இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கையில் கல்வித்துறையினர் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
மேலும்
-
சிறுமியை பாலியல் கொடுமை செய்த கொடூரன் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்..
-
குழந்தையின் நலனுக்காக தீர்ப்பை மாற்றலாம்: விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஈராக் வணிக வளாகத்தில் தீ 61 பேர் பலி; 11 பேர் மாயம்
-
ரூ.66,000 கோடி இழப்பீடு வழக்கு: 'பேஸ்புக்'கிற்கு எதிரான விசாரணை துவக்கம்
-
'சிறையில் எனக்கு என்ன நேர்ந்தாலும் ராணுவ தளபதி மூனீர் தான் பொறுப்பு'
-
இடிக்கப்பட்டது சத்யஜித் ரே வீடு இல்லை: வங்கதேச அரசு