குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், நவலை பஞ்.,க்கு உட்பட்ட அண்ணாமலைப்பட்டியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த, 3 வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் தவித்து வருவதாக, கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறுகையில், 'கடந்த, 3 வாரங்களுக்கு முன், மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வருவதில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகம் மற்றும் மொரப்பூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் அருகிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களில் வெளியேறும் கசிவு நீரை பிடித்து வருகின்றனர். எனவே, அண்ணாமலைப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேலும்
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
-
தனியார் பள்ளி நிர்வகிப்பதில் பிரச்னை மாணவர்களுடன் ஆசிரியர்கள் தர்ணா