மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்தது; இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்!


மும்பை: மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து, 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 7 பேரை தேடும் பணி நடக்கிறது.


மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 3 மாடி கட்டடத்தின் ஒரு வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 12 பேர் காயங்கள் உடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.



மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ''மீட்பு பணிகள் முடிந்த பிறகு முழு விபரங்கள் தெரிவிக்கப்படும்'' என மும்பை போலீசார் தெரிவித்தனர்.

Advertisement