சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் ஊழல் வழக்கில், பிறந்த நாள் தினத்தன்று பூபேஷ் பாகல் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் இன்று (ஜூலை 18) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுபானக் கொள்கை விவகாரத்தில், பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள பாகலின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். இதனால், அவரது வீட்டுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர், ஊழல் வழக்கில், பிறந்த நாள் தினத்தன்று பூபேஷ் பாகல் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
முன்னதாக, அமலாக்கத்துறை சோதனை குறித்து, பூபேஷ் பாகல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கொடுக்கும் பிறந்தநாள் பரிசுகளை உலகின் எந்த ஜனநாயகத்திலும் யாராலும் கொடுக்க முடியாது.
இப்போது என் மகன் சைதன்யாவின் பிறந்தநாளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் என் வீட்டை சோதனை நடத்தினர். இந்தப் பரிசுகளுக்கு நன்றி. நான் அவற்றை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும்
-
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை
-
பழுதாகி பரிதவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.26,261
-
கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
3 நாட்களில் பொற்கோவிலுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல்: இன்ஜினியர் கைது
-
ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்