பீஹாரில் ரோடு ஷோவில் விபத்து; வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோர் காயம்!

2


பாட்னா: ஆராவில் நடந்த ரோடு ஷோவில் வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோரின் விலா எலும்பில் லேசான காயம் ஏற்பட்டது.


தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.


மேலும், அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தும், கேள்வியும் எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் இன்று ஆரா மாவட்டத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியதில் காயம் ஏற்பட்டது. அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது.


அவரால் இயல்பாக நடமாட முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு அவரை, கட்சியினர் மேடைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் மருத்துவ சிகிச்சைக்காக பாட்னாவுக்குச் சென்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement