பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் :அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்தது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து, 5,248 கன அடியாக இருந்தது.
அணை நீர்மட்டம், 96.66 அடி; நீர் இருப்பு, 26.1 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி, காளிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 1,350 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டிருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement