புரியாத புதிரா பும்ரா, ரிஷாப் பன்ட்: மான்செஸ்டர் டெஸ்டில் 'சஸ்பென்ஸ்'

லண்டன்: மான்செஸ்டர் டெஸ்டில் 'வேகப்புயல்' பும்ரா, ரிஷாப் பன்ட் இடம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 23ல் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது.
இப்போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியை முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த லார்ட்ஸ் டெஸ்டில் இடது கை ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த துணை கேப்டன் ரிஷாப் பன்ட், பேட்டிங் மட்டும் செய்தார். இவருக்கு மாற்றாக கீப்பிங் பணியை துருவ் ஜுரல் மேற்கொண்டார். தற்போது இந்திய வீரர்கள் லண்டன், பெக்கன்ஹாம் கவுன்டி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரிஷாப் பேட்டிங் செய்யவில்லை. கடந்த 3 டெஸ்டில் 425 ரன் (சராசரி 70.83) எடுத்து நல்ல 'பார்மில்' உள்ளார். வரும் போட்டியில் இவரால் கீப்பர்-பேட்டராக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ரவி சாஸ்திரி 'அட்வைஸ்': இது பற்றி இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''பேட்டிங், கீப்பிங் என இரண்டு பணியையும் ரிஷாப் செய்ய வேண்டும். 'கீப்பிங்' செய்ய முடியாத பட்சத்தில் இவரை 'ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக' மட்டும் மான்செஸ்டர் போட்டியில் களமிறக்க கூடாது. ஏனெனில் பேட்டராக இருந்தால் வெறும் கையில் 'பீல்டிங்' செய்ய வேண்டும். அப்போது பந்து விரலில் பட்டால், காயத்தின் தன்மை மோசம் அடையலாம். கீப்பராக இருந்தால், 'கிளவ்ஸ்' அணிந்து பாதுகாப்பாக விளையாடலாம். பன்ட் விஷயத்தில் கேப்டன் சுப்மன், பயிற்சியாளர் காம்பிர் கவனமாக முடிவு எடுக்க வேண்டும். இவர் காயம் அடைந்தது ஏற்கனவே தெரியும். இனி போட்டியின் பாதியில் மாற்று கீப்பருக்கு அனுமதி கிடைக்காது. முழுமையாக உடற்தகுதி இருந்தால் மட்டும் விளையாடலாம். ஒருவேளை விரல் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், ஓய்வு எடுத்துக் கொண்டு ஓவலில் நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்டில் ரிஷாப் களமிறங்குவதே நல்லது,''என்றார்.
வருவாரா பும்ரா: பும்ராவை பொறுத்தவரை முதுகு பகுதி காயத்துக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டதால், 3 டெஸ்டில் தான் விளையாடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் விளையாடினார். அடுத்து, எட்ஜ்பாஸ்டன் போட்டியில் ஓய்வு எடுத்தார். லார்ட்ஸ் டெஸ்டில் பங்கேற்றார். மான்செஸ்டரில் ஓய்வு எடுப்பாரா என தெரியவில்லை. 2 முறை 5 விக்கெட் சேர்த்து, 2 டெஸ்டில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பயிற்சியில் சாய் சுதர்சன் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட அர்ஷ்தீப் சிங்கிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டிருப்பது இன்னொரு பின்னடைவு.
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் டென் டஸ்காட்டே கூறுகையில்,''காயத்தில் இருந்து மீள ரிஷாப் பன்ட்டிற்கு போதிய அவகாசம் உள்ளது. அணியில் இடம் பெறுவார் என நம்புகிறேன். மான்செஸ்டர் போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். இதை மனதில் கொண்டு பும்ராவை சேர்க்க முயற்சிப்போம்,''என்றார்.
@quote@
மான்செஸ்டரில் 1936ல் இருந்து இந்தியா விளையாடுகிறது. இங்கு 9 டெஸ்டில் 4 தோல்வி, 5 'டிரா' சந்தித்துள்ளது. கடைசியாக 2014ல் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் 54 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இம்முறை கேப்டன் சுப்மன் கில் முதல் வெற்றி பெற்று வரலாறு படைக்கலாம்.quote
மேலும்
-
உலக செஸ்: இந்தியா அபாரம்
-
இண்டி கூட்டணிக்கு ஆம் ஆத்மி 'குட்பை'
-
பணமூட்டை விவகாரத்தில் ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
-
பஹல்காமில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப்., பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா: மத்திய அரசு வரவேற்பு
-
பெண்களை காண்பித்து ரூ.200 கோடி மோசடி: கடன் வாங்கி தருவதாக சொகுசு பங்களாவில் பதுங்கியவர் கைது
-
'தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு தயார்'