ஊத்தங்கரையில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

ஊத்தங்கரை, :ஊத்தங்கரை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் (பொ) பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில், புதிய தொழில்நுட்பங்கள், சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், குறுவை தொகுப்பு, இயந்திர நடவு பின்னேற்பு மானியம் ஏக்கருக்கு 4,000 ரூபாய், கோடை உழவு மானியம் ஏக்கருக்கு, 800 ரூபாய், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து விளக்கினர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சாரதி, சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement