பைக் மீது வேன் மோதி வாலிபர் பரிதாப பலி



கிருஷ்ணகிரி, பாரூர் அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ், 29. இவர் கடந்த, 16ல், பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றுள்ளார்.


இரவு, 7:00 மணியளவில் மஞ்சமேடு ஆற்று பாலம் அருகில், தர்மபுரி சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பிக்கப் வேன் மோதியதில் துாக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் இறந்தார்.விபத்து குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement