ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்
கரூர் :ஆடி முதல் வெள்ளியையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார கோவில்களில், பக்தர்கள் குவிந்தனர்.தமிழகம் முழுவதும் நேற்று, ஆடி வெள்ளியையொட்டி, அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. கரூர் நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவில், ஜவஹர் பஜார் கன்னிகா பரமேஸ்வரி கோவில், கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி கோவில் மற்றும் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சுவாமியை
வழிபட்டனர்.
அதேபோல், கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில், மூலவருக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரமும், சுங்ககேட் ஆதி மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு அலங்காரமும், காந்தி கிராமம் மஹா மாரியம்மன் கோவிலில், மூலவருக்கு பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், வெண்ணைமலை, பவித்திரம், புகழூரில் உள்ள, பாலசுப்பிரமணிய கோவில்களிலும், ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* குளித்தலை மாரியம்மன் கோவில், பேராளகுந்தாளம் முருகன், கடம்பவனேஸ்வரர், நீலமேகப்பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பகவதியம்மன், ஐயப்பன், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர். சிவாயம் சிவபுரீஸ்வரர், இனுங்கூர் எல்லையம்மன் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
* லட்சுமணம்பட்டி, பாம்பாலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது.
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை