மாயனுார் கதவணைக்கு 17,000 கனஅடி நீர் வரத்து
கரூர்:மாயனுார் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
மேட்டூர் அணை யில் இருந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன், 12 முதல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 17 ஆயிரத்து, 648 கன அடியாக இருந்தது. அதில், 16 ஆயிரத்து, 178 கன அடி தண்ணீர் டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.76 அடி யாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 86 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்