ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 1

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காரில் கடத்திவரப்பட்ட 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., அருண் தலைமையிலான போலீசார் பரமக்குடி காக்கா தோப்பு வைகை ஆற்று படுகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தலா 5 கிலோ எடை உள்ள 23 மூடைகளில் 1150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்து, கார் உரிமையாளரான திருச்செந்துார் மெய்ஞானபுரம் பெரியசாமியை 36, கைது செய்தனர். தப்பி ஓடிய பரமக்குடி சோமநாதபுரத்தை சேர்ந்த கருப்பு ராஜாவை தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
Advertisement
Advertisement