தார் மிஷினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி



குமாரபாளையம், குமாரபாளையம், மாரக்காள்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சத்யா, 34; இவர் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தார் மிஷின் ஓட்டும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஹரிஸ்ராஜ், 14, தருண்ராஜ், 6, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில், விசைத்தறி கூடத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சத்யா தார் மிஷின் ஓட்டிக்கொண்டிருந்தார்.அப்போது அவரது துப்பட்டா, மிஷின் சக்கரத்தில் சிக்கி இழுத்ததில், கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement